நடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம்? கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்

|

சென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது.

மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை.

நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது அவரது கவனம் முழுவதும் அதிலேயே இருக்கிறதாம். எப்போதாவது காதுக்கும் விருந்தளிக்கும் இசைச் சேவையை ஆற்றுகிறாராம்.

இதை கவனித்த அவரது நலம் விரும்பிகள், ‘நடிப்பா, இசையா, இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு. ஒன்று முழுநேர நடிகனாகி விடு அல்லது மீண்டும் இசையமைப்பாளராகி விடு. அதை விட்டுட்டு இப்படி ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்ய நினைப்பது உனது எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என அறிவுரை கூறுகிறார்களாம்.

இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என சிந்தித்து வருகிறாராம் சம்பந்தப்பட்ட நடிகனான இசையமைப்பாளர்.

 

Post a Comment