'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

|

சென்னை: ஹீரோ அவதாரமெடுத்திருக்கும் காமெடி சந்தானம், அடுத்து ட்விட்டர் களத்திலும் குதித்துவிட்டார்.

முன்பெல்லாம் ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலை.

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

ஆனால் இப்போது, அவர்களே தாங்கள் பல் துலக்குவதில் தொடங்கி, தேர்தலில் ஓட்டுப் போடுவது வரை அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள் ட்விட்டரில். அவ்வப்போது விதவிதமாக படங்கள் எடுத்தும் வெளியிடுகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் நாங்களே ட்விட்டரில் சொல்கிறோம். அதுவரை மீடியாக்காரர்கள் காத்திருக்கவும் என ஸ்டேட்மென்டே விடுகிறார்கள்.

சமூக வலைத் தளங்கள் அந்த அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு வசதியாக உள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர, மற்ற எல்லாரும் ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

இப்போது நடிகர் சந்தானமும் ட்விட்டரில் களமிறங்கியுள்ளார். @iamsanthanam என்ற பெயரில் அவரது ட்விட்டர் பக்கம் அமைந்துள்ளது.

என்னைப் பற்றியும் என் படங்கள் பற்றியும் என அஃபிஷியல் ட்விட்டர் பக்கத்தில் இனி தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன் என்று தகவலும் வெளியிட்டுள்ளார்.

அறிவித்த சில மணி நேரங்களில் 1000 பேருக்கு மேல் அவருக்கு பாலோயர்கள் வந்துள்ளனர். முதல் ட்வீட்டாக தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

 

Post a Comment