ஜெயா டிவி அழைப்பு... பரவசத்தில் வடிவேலு!

|

சொல்லாம வந்துடுச்சே பொல்லாத நேரம் என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு, கடும் கோடையில் பன்னீர் குளியல் போட்ட சந்தோஷத்தில் திளைக்கிறார்.

மூன்றாண்டு வனவாசத்துக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் தெனாலிராமன். வரும் ஏப்ரல் 18-ம் படம் வெளிவரவுள்ள நிலையில் அந்தப் படத்துக்கு எதிராக சிலர் கோஷம் போட ஆரம்பித்து, வடிவேலுவுக்கு டென்ஷன் தந்தனர்.

ஜெயா டிவி அழைப்பு... பரவசத்தில் வடிவேலு!

நாம் தமிழர் சீமான்தான் இந்த இக்கட்டில் வடிவேலுவுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இந்த நிலையில்தான் வடிவேலுவே எதிர்ப்பார்க்காத ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அது ஆளும்கட்சியின் சேனலான ஜெயா டிவியிலிருந்து.

ஆஹா.. வந்துடுச்சிய்யா விடிவு காலம் என குதூகலித்தவர், சேனல் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் ஸ்டுடியோவில் போய் நின்றுவிட்டார்.

வருகிறது தமிழ்ப் புத்தாண்டுக்காக ஜெயா டிவிக்கு சிறப்புப் பேட்டி வேண்டும் என்றதும், சந்தோஷமாக மனம் விட்டுப் பேசியிருக்கிறாராம்.

பேட்டியில் தாராளமாக அம்மாவின் புகழையும் பாடியுள்ளாராம். அம்மாவுக்கு என் நடிப்பு பிடிக்கும். திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் என் காமெடியைப் பார்த்து கைதட்டிச் சிரிச்சவுகளாச்சே அந்த மவராசி என புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம்.

ஹலோ.. யாரது வடிவேலு படத்துக்கு எதிரா கொடி பிடிக்கிறது!!

 

Post a Comment