தயாரிப்பாளர் முக்தா ஆர் கோவிந்த் மரணம்

|

சென்னை: பிரபல தயாரிப்பளர் முக்தா ஆர் கோவிந்த் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

ரஜினி நடித்த பொல்லாதவன், சிவப்பு சூரியன், சிவாஜி நடித்த அந்தமான் காதலி, கமல் நடித்த நாயகன், ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்கள் முக்தா.வி.சீனிவாசன், முக்தா.வி.ராமசாமி.

முக்தா.வி,ராமசாமியின் மகனும் தற்போது நவீன் சந்திரா, ரூபாமஞ்சரி நடிக்க சத்யசிவா இயக்கத்தில் உருவான சிவப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளருமான முக்தா ஆர் கோவிந்த் வயது 53 அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு பிரியதர்ஷினி கோவிந்த் என்ற மனைவி உள்ளார். இவர் பிரபல கலாசேத்ரா நடன கல்லூரியின் முதல்வர். அவர் இத்தாலியில் இருப்பதால் அவர் வந்த பிறகு வெள்ளிக்கிழமை (11.04.2014) அன்று காலை ராயப்பேட்டை மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

முக்தா.ஆர்.கோவிந்த் அவரது உடல் அஞ்சலிக்காக எண் 1, ஜெகதாம்பாள் தெரு, ராயப்பேட்டை, சென்னை என்ற விலாசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment