சென்னை: கத்தி பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய் சிக்கியுள்ளார். அதே நேரம் சூர்யா நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தை லைகா மொபைல் நிறுவனம், ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து தயாரிக்கிறது. இந்நிலையில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதனால் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த லைகா மொபைல் நிறுவனம் முதலில் சூர்யாவை தான் அணுகியதாம். நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் தருகிறோம் எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டதாம். சூர்யா அந்நிறுவனம் பற்றி விசாரித்து அது ராஜபக்சேவுக்கு நெருக்கமானவருடையது என்று தெரிந்தவுடன் நைசாக நழுவிவிட்டாராம்.
சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதால் அந்நிறுவனம் விஜய்யை அணுகியுள்ளது. பாவம் அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.
Post a Comment