சகாப்தம் படத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்!

|

மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் முதன் முதலாக சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் சகாப்தம்.

சகாப்தம் படத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்!

இந்தப் படத்தில் நீங்களும் நடிப்பீர்களா என படத் தொடக்க விழாவில் விஜயகாந்திடம் கேட்கப்பட்டது. அதுபற்றி தான் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார் விஜயகாந்த்.

பின்னர் இந்தப் படத்துக்காக மனைவியுடன் சிங்கப்பூர் சென்று லொகேஷனும் பார்த்தார். இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

விஜயகாந்த் கடைசியாக நடித்த படம் விருதகிரி. படத்தின் இயக்குநரும் அவர்தான். அதன் பிறகு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேட்டும்கூட விஜயகாந்த் நடிக்க சம்மதிக்கவில்லை. அரசியலில் மிகத் தீவிரமாக இருந்தார்.

தேர்தல் முடிந்த பிறகு தனது பகுதிகளை படமாக்கிக் கொள்ளலாம் என இயக்குநர் சந்தோஷிடம் கூறியுள்ளாராம் விஜயகாந்த்.

இந்தப் படம் காதல் - ஆக்ஷன் படம் என்று சொல்லப்பட்டாலும், விஜயகாந்த் வரும் காட்சிகளில் அரசியலும் இருக்கும் என்கிறார்கள்.

 

Post a Comment