சென்னை: பள்ளி சிறுவர்களின் சண்டையை மையமாக வைத்த படம் மூலம் ரசிகர்களின் அங்கீகாரத்தை சம்பாரித்தவர் இந்த திருட்டுப் பட நடிகர். சமீபத்தில் இவர் நடித்த கிராமத்து பை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் விரைவில் வேறு சில மொழிகளிலும் ரீமேக் செய்யப் பட உள்ளது. முந்தைய சில படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாத நிலையில், கிராமத்துப் பை உச்ச நடிகரின் படத்துக்கு இணையாக முதல் நாள் வசூலை வாரிக் குவித்த சந்தோஷத்தை திருட்டு நடிகர் பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்.
இந்நிலையில், சமீப காலமாக திரைப்பட விழாக்களுக்கு வருகை தரும் நடிகர் மற்றவர்களிடமிருந்து அதிகபட்ச இடைவெளியை ஏற்படுத்தி அமர்கிறாராம். காரணம் பகல், இரவு என வித்தியாசமில்லாமல் எந்நேரமும் நடிகர் போதையில் தான் வாழ்கிறாராம்.
மற்றவர்களுக்கு மிக அருகில் சென்றால் வாசனைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் தான் இந்த இடைவெளி திட்டமாம்.
வளர்ந்து வரும் நிலையில் இப்படி தேவையில்லாத பழக்கவழக்கங்களால் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொள்கிறாரே என அவரது நலம் விரும்பிகள் ஆதங்கப் படுகிறார்களாம்.
மேலும் கிசு கிசு செய்திகள்
Post a Comment