ஹைதராபாத்: ட்விட்டரில் தனது நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை பார்த்த தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதி அதிர்ச்சி அடைந்தார்.
தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதி. யாரோ ட்விட்டரில் அவரது பெயரில் போலி கணக்கு துவங்கி அதில் அஞ்சலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டனர். இதை பார்த்த அஞ்சலியின் நண்பர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து அதை நடிகையிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்ட அஞ்சலி கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்தார். மேலும் அந்த போலி கணக்கை முடக்கவும் செய்தார்.
நடிகையின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.
Post a Comment