ஹேப்பி நியூ இயர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக ஷாரூக்கான் வந்ததால், நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர் மீடியாக்காரர்கள்.
இந்த நிகழ்ச்சி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு பிரஸ் மீட் தொடங்கும் என தினசரி மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், வீடியோ, போட்டோகிராபர்களுக்கு சொல்லியிருந்தனர்.
ஆனால் ஷாரூக்கான் வந்ததோ இரவு 8 மணிக்கு!
அவர் வரும் வரை காத்திருந்த மீடியாக்காரர்கள், ஷாரூக்கான் உள்ளே நுழைந்ததும் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், பிரஸ் மீட்டைப் புறக்கணித்து வெளியேறினர்.
ஒவ்வொரு செய்தியாளருக்கும் தனித்தனியாக பேட்டியளிப்பதாக ஷாரூக்கான் உறுதி கூறியும், அதைப் பொருட்படுத்தாமல் வெளியேறினர் செய்தியாளர்கள்.
ஷாரூக்கானின் அடுத்த படம் ஹேப்பி நியூ இயர். பெரிய அளவில் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
Post a Comment