சென்னை: இளையராஜா தான் தனது கடவுள், தலைவன், இசை, உயிர் என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கரா ராஜா இசைப்பணியை கவனித்துள்ளார். படத்தில் தனுஷ் எழுதிய பாடலை யுவன் இசையில் இளையராஜா பாடியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் கடவுள் !! என் தலைவன் !! என் இசைஞானி !! என் இசை !! என் உத்வேகம் !! என் உயிர் !! என் இதயத்துடிப்பு !! என் இளையராஜா :) என்று தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த இசைஞானி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனுஷின் இந்த திடீர் பாசத்தை பார்த்த பலரும் இது என்ன புது பெர்ஃபாமஷ்ன்ஸ் என்று தெரிவித்துள்ளனர்.
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கி வரும் மாரி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தின் மூலம் காஜல் அகர்வால் முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
Post a Comment