லிங்கா முதல் நாள் வசூல்... தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

|

ரஜினியின் லிங்கா படம் வெளியான முதல் நாளே தமிழகம் மற்றும் ஆந்திராவில் எந்திரன் படத்தின் முதல் நாள் சாதனையைத் தகர்த்தெறிந்தது.

தமிழகம் முழுவதும் 700 அரங்குகளில் லிங்கா படம் நேற்று வெளியானது. பல திரையரங்குகளில் லிங்கா நள்ளிரவே திரையிடப்பட்டது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு.

இந்த சிறப்புக் காட்சிகள் தவிர்த்த ரெகுலர் ஷோக்கள் மூலமாக மட்டுமே ரூ 17 கோடியை லிங்கா தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

லிங்கா முதல் நாள் வசூல்... தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 8 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை.

வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது (இன்னும் இந்திப் பதிப்பு வெளியாகவில்லை). அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா. அந்த விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

 

Post a Comment