விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
முக்கியமான சண்டைக் காட்சிகளை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் எடுத்து வருகிறார்கள்.
தாய்லாந்து நட்டிலுள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க சாமுராய் வகை வாள் சண்டை வீராங்கனைகள் இருவரோடு ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகளை சேர்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ், லெக் ஜெம்ப்,பாக்சிங், ரிவர்ஸ் ஆக்ஷன், பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலை சிறந்த கலைஞர்கள் பங்கேற்க சண்முகபாண்டியன் மோதும் சண்டை காட்சி 6 நாட்கள் நடந்தது.
இதற்காக சுமார் ரூ 60 லட்சம் செலவானது. இச்சண்டைக் காட்சியில் 20 தாய்லாந்து ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றார்கள். நடிகர் ஜெகன், ரஞ்சித்,சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இச்சண்டை காட்சியில் அதிகமான கிரேன்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா.
Post a Comment