நெல்லையில் கத்தி பட விழா.. விஜய், சமந்தா பங்கேற்பு

|

கத்தி படத்தின் 50 நாள் விழாவை நெல்லையில் கொண்டாடுகின்றனர். இதில் விஜய் மற்றும் சமந்தா கலந்து கொள்கின்றனர்.

நடிகர் விஜய் நடித்து வெளியான ‘கத்தி' திரைப்படம் 50 நாளை கடந்து ஓடிக்கொண்டுள்ளது.

நெல்லையில் கத்தி பட விழா.. விஜய், சமந்தா பங்கேற்பு

இதைக் கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கத்தி பட வெற்றி விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதற்காக பாளை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்பதற்காக விஜய் நாளை மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

அங்கிருந்து நெல்லை வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விஜய்யுடன் கத்தி பட நாயகி சமந்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், டைரக்டர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் வருகின்றனர்.

கத்தி படம் நெல்லை மாவட்ட கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment