சென்னை: லிங்காவின் அதிகாலை தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
பீட்சா படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். என்ஜினியரிங் படித்துள்ள அவர் பீட்சாவை அடுத்து சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா படத்தை எடுத்து வெற்றி கண்டார்.
அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஆவார். ரஜினியின் லிங்கா படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கார்த்திக் தான் தனது தலைவரை ஷிமோகாவில் சந்தித்து பேசியதையும், அவர் ஜிகர்தண்டா படத்தை புகழ்ந்ததையும் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ரஜினியை சந்தித்து பேசிய தருணங்கள் விலை மதிக்க முடியாதது என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். கார்த்திக் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் நடித்த கருணாகரன் லிங்காவிலும் நடித்துள்ளார்.
கருணாகரனை லிங்காவில் ரஜினிக்கு அருகில் பார்க்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாக கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 12ம் தேதி அதிகாலை தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment