சென்னை: நான் வளர்வது பிடிக்காத யாரோ என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கி வரும் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இது தவிர அவர் கை நிறைய இந்தி படங்கள் வைத்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஸ்ருதியின் குத்தாட்டத்தை கண் குளிர பார்க்க ஆந்திர ரசிகர்கள் துடிக்கிறார்கள். இதனால் அவருக்கு அள்ளிக் கொடுத்து குத்தாட்டம் போட வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கும், ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் தான் ஸ்ருதி மகேஷ் பாபு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த ஸ்ருதி கூறுகையில்,
நான் முன்னணி நடிகையாக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.
Post a Comment