இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடிகை மஹீரா கான், ஷாருக்கானின் அடுத்த ஜோடியாகிறார். பர்ஹான் அக்தர் தயாரிக்க, ராகுல் தலோக்கியா இயக்கும் புதிய படத்தில் ஷாருக் கானடுன் ஜோடி போடுகிறாராம் மஹீரா கான்.
இதுதான் மஹீராவின் முதல் பாலிவுட் படம். இப்படத்திற்கு ரயீஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
பர்ஸானியா என்ற படத்தின் இயக்குநர்தான் ராகுல் தலோக்கியா. இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளரான ரித்தேஷ் சித்வானி, மஹீரா குறித்த தகவலையும், ஒரு புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
அதில், கராச்சியைச் சேர்ந்த நடிகை மஹீரா கான், ஷாருக்கானுடன் ரயீஸ் படத்தில் இணைகிறார் என்று கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு சோயப் மன்சூர் என்பவரின் இயக்கத்தில் வெளியான போல் என்ற பாகிஸ்தான் படத்தில் நடித்திருந்தார் மஹீரா என்பது குறிப்பிடத்தக்கது.
மஹீரா திருமணமானவர். இவரது கணவர் அலி அஸ்காரி. இவர் மஹீராவின் கல்லூரித் தோழி ஆவார்.
தற்போது யாஷ் ராஜின் ஃபேன் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக் கான், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மஹீரா கானுடன் ஜோடி போட வருகிறாராம்.
மும்பை மற்றும் குஜராத்தின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.
Post a Comment