மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ் வாடியா பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான் 5 ஆண்டுகளாக காதலித்த தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் வாடியா தன்னை 2009ம் ஆண்டு நடந்த பார்ட்டி ஒன்றில் அறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் வாடியா குழுமம் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ் வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கிடையே இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள ப்ரீத்தி, நெஸ் தரப்பில் முயற்சி செய்யப்படுவதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ப்ரீத்தி இஷ்க் இன் பாரிஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார். படம் புஸ்ஸானதால் அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார் என்று இந்தி மீடியாக்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment