சேரனின் சி2எச் திட்டம் தள்ளி வைப்பு.. தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் எடுத்த முடிவாம்!

|

இயக்குனர் சேரன் சமீபத்தில் இயக்கியுள்ள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ரிலீசாகாமல் நீண்ட நாளாக முடங்கியே கிடக்கிறது.

சேரன், புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வசதியை உருவாக்கி வந்தார்.

சேரனின் சி2எச் திட்டம் தள்ளி வைப்பு.. தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் எடுத்த முடிவாம்!

இந்த முறையிலேயே நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தையும் வெளியிடவிருந்தார்.

வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஒரு டிவிடிக்கான தொகையான ரூ.50-ல் முன்தொகையாக ரூ.10 மட்டும் கொடுத்து பதிவு செய்து கொள்ளும் திட்டமும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டிருந்தது. அதற்கு பல ஊர்களில் நல்ல வரவேற்பும் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று சேரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அ

தில் டிவிடி வெளியான அன்றே தியேட்டர்களிலும் படம் வெளியாகும் என்று அறிவித்த தங்களின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தன்னிடம் பேசி நல்ல முடிவெடுக்க முன்வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில் நல்ல உடன்பாடு எட்டப்பட்ட பிறகு சி2எச் சேவை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment