சென்னை: முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தி, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் கௌதம் கார்த்திக்கின் ரங்கூன் படப்பிடிப்பிற்கு போலீஸ் தடை விதித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக் தற்போது ரங்கூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள வீட்டில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பை நேரில் காணும் ஆர்வத்தில் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கும், படக்குழுவினருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என படப்பிடிப்பிற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால், படிப்பிடிப்பை ரத்து செய்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Post a Comment