டார்லிங் பேய்க்காக காத்திருக்கும் கோஸ்ட் கோபால் வர்மா!

|

சென்னை: சில டிரைலர்கள் சிரிப்பை வரவழைத்து படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும், சில டிரைலர்கள் எரிச்சலை ஏற்படுத்தும், இதில் டார்லிங் படம் முதல் ரகம்.

ஜி.பி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள டார்லிங் படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது. ஐ வருமா வராதா என்று சிலர் சீட்டு குலுக்கி பார்த்துக்கொண்டிருக்க சத்தமே இல்லாமல் பொங்கல் ரேஸில் இணைந்து விட்டது டார்லிங்.

டார்லிங் பேய்க்காக காத்திருக்கும் கோஸ்ட் கோபால் வர்மா!

இப்படத்தின் ட்ரைலர் டிவியில் அரைமணிக்கு ஒருமுறை ஒளிபரப்பாகிவருகிறது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த விளம்பரம் வரும்போது யாரும் ரிமோட்டை மாற்றுவதில்லையாம்.

நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன் பேயை விரட்ட "கோஸ்ட் கோபாலாக" வருகிறார்.

ட்ரைலரில் கருணாஸ் பேசும் "எண்ணமா இப்படி பண்றீங்களேமா?" என்ற வசனத்தில் ஆரம்பித்து, அதன் பிறகு வரும் அனைத்து வசனமும் சிரிப்பு சரவெடி.

இந்த கோஸ்ட் கோபல் வர்மா என்னைத் தாண்டி ஏதாவது பேய் வருமா? என்கிறார் ராஜேந்திரன்.

இறுதியில் தலைவிரி கோலமாய் வரும் பேய்,"ஐ யம் கம்மிங் பார் யூ" என்று கூற அதற்கு தலையை ஆட்டிக்கொண்டே ராஜேந்திரன் ‘ஐயம் வெயிட்டிங்' என்று கூறுவது செம கலாட்டா.

ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

டார்லிங் பேயை பார்க்க போறவங்க கோஸ்ட் கோபால்வர்மாவை பார்த்து சிரித்துவிட்டு வாங்க.

 

Post a Comment