கல்யாண விசயத்தில் கன்பியூஸ் ஆன கும்கி

|

பத்தாப்பு படிக்கும் போதே படத்தில் நடிக்க வந்து பல படங்கள் ஹிட் அடித்த பச்சப்புள்ள கும்கிக்கு இப்போ குழப்பம் கூடிப்போச்சாம்.

சினிமாவில் டூயட் பாடுவது போல நிஜத்தில் யாருடனாவது டூயட் பாடுவீர்களா என்று கேட்டால் ஐயோ... நான் சின்னப்புள்ளையாக்கும் என்று சிணுங்குவார்.

இப்போது ப்ளஸ் டூ வரும் அவர் பருத்தி வீரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவர் விடும் ஸ்டேட்மென்ட்கள் இன்னும் சின்ன புள்ளதான் என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றன.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில், தன் தேசத்து ஆள் ஒருவரைதான் திருமணம் செய்வேன் என்றார்.

பிறகு, திருமணமே செய்யப் போவதில்லை, அந்த நாட்டிய நடிகை மாதிரி இருக்கப் போகிறேன் என்றார். பச்சப்புள்ள அறியாம பேசுது என்று யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

சமீபத்திய பேட்டியில், கிசு கிசு பற்றியெல்லாம் கவலையில்லை. அதனை கண்டு கொள்ள மாட்டேன். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்ப என்கிற ரீதியில் பேசியுள்ளார்.

புள்ள பக்குவப் பட்டிருச்சோ என்று யோசிக்கும் முன் மீண்டும் காதல் திருமணம்தான் செய்வேன். கண்டிப்பாக அவர் சினிமாவில் உள்ளவராக இருக்க மாட்டார் என திருமண தோசையை மீண்டும் திருப்பிப் போட்டிருக்கிறார்.

பாவம் கும்கி பெண்ணுக்கு என்ன ஆச்சு? திருமண விஷயத்தில் ஏன் இப்படி குழப்ப ஸ்டேட்மென்ட் விடுக்கிறார் என்று அவரது ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்துள்ளனர்.

 

Post a Comment