அடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் மோகன்லால்... ஏன்?

|

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் தனது சொத்துக்களை அடுத்தடுத்து விற்று வருவதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மோகன்லாலக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்களில் பலவற்றை அவர் அடுத்தடுத்து விற்பனை செய்து வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ள கழக கூட்டத்தில் மோகன்லாலுக்கு அதி நவீன வசதிகள் கொண்ட விஸ்வமயா டப்பிங் ஸ்டியோ இருந்தது. இதை சமீபத்தில் ஏரிஸ் என்ற நிறுவனத்துக்கு மோகன்லால் விற்பனை செய்தார்.

அடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் மோகன்லால்... ஏன்?

அடுத்து, திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் தலைமை செயலகத்துக்கு நேர் எதிரே இருந்த 50 சென்ட் நில்த்தை சில மாதஙகளுக்கு முன் ஒரு அரசியல் கட்சிக்கு விற்பனை செய்தார்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் வெள்ளயாணி என்ற இடத்தில் இருந்த 1.32 ஏக்கர் நிலத்தை சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மோகன்லால் விற்பனை செய்துள்ளார்.

கடந்த 27 வருடங்களுக்கு முன் கிரிடம் என்ற படம் சூப்பர் ஹீட்டானதை தொடர்ந்து இந்த நிலத்தை மோகன்லால் வாங்கினார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மோகன்லாலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த இடத்தில்தான் அப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்தது. எனவேதான் அந்த இடத்தை மோகன்லால் அபபோது வாங்கினார். சென்டிமென்டாக கருதி வாங்கிய இடத்தை மோகன்லால் விற்பனை செய்துள்ளது அவரது நெருங்கிய வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மோகன்லால் எதற்காக அடிக்கடி சொத்துகளை விற்பனை செய்கிறார் என்று தெரியாமல் மலையாளத் திரையுலகினர் குழப்பமாகியுள்ளனராம்.

 

Post a Comment