லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

|

ரஜினி நடித்த லிங்கா படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மார்ச் 22-ம் தேதி நடக்கிறது.

ரஜினி - சோனாக்ஷி சின்ஹா - அனுஷ்கா நடிப்பி், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.

லிங்கா 100வது நாள்.. ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

படத்துக்கு மிகப் பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தாலும், முதல் வாரத்திலிருந்தே திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறைப் பிரச்சாரத்தால் படம் பாதிக்கப்பட்டது. படம் நஷ்டம் என்று கூறி உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என்றெல்லாம் அறிவிப்புகள் ஒருபக்கம், படத்தை செத்த பிணம் என்று கீழ்த்தரமாகக் கூறி பிரச்சாரம் என்று தொடர்ந்தனர்.

இத்தனைக்கும் நடுவில் 35 நாட்கள் வரை நூற்றுக்கணக்கான அரங்குகளில் ஓடிய இந்தப் படம், பின்னர் சொற்ப அரங்குகளில் மட்டுமே ஓடியது. சென்னையில் அபிராமி, தேவி, ஆல்பர்ட் வளாகங்களில் இந்தப் படம் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் வரும் மாரச் 22-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

இதனை சென்னை ரஜினி ரசிகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆல்பர்ட் திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அன்று திரண்டு வந்து இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். நூறாவது நாளையொட்டி நடக்கும் லிங்கா சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

 

Post a Comment