காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்

|

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் பிறந்தநாள் விழாவுக்கு காதலர் ரித்திக் பசினுடன் கைகோர்த்து வந்திருந்தார்.

பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி அளித்தார். அந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.

காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த சுஷ்மிதா சென்

பார்ட்டிக்கு வந்தவர்களின் கண்கள் எல்லாம் ஒரேயொரு ஜோடி மீது தான் இருந்தது. அது தான் சுஷ்மிதா சென், ரித்திக் பசின் ஜோடி. சுஷ்மிதா ரித்திக்கை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்தது பலரையும் வியப்படைய வைத்தது.

பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோதும் அவர்கள் கையால் முகத்தை மறைக்கவோ, பத்திரிக்கையாளர்களை திட்டவோ செய்யவில்லை. நைட்கிளப்கள் நடத்தி வரும் 33 வயது பசின் பாலிவுட் பிரபலங்கள் சிலரின் நண்பர் ஆவார்.

ரினீ, அலிஷா என்ற 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றபோது தனக்கும் குழந்தை பெறும் ஆசை வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment