மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது.. பெருமிதத்தில் உன்னி கிருஷ்ணன்!

|

தன் மகள் உத்ரா பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் உள்ளார் பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன்.

நேற்று அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த பாடகிக்கான விருது சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு.. பாடலைப் பாடிய உத்ராவுக்குக் கிடைத்தது.

மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது.. பெருமிதத்தில் உன்னி கிருஷ்ணன்!

10 வயது சிறுமி இவர். பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள்.

தமிழ் சினிமாவில் தன் மகள் பாடிய முதல் பாடலிலேயே உத்ரா முத்திரை பதித்துவிட்டது உன்னிகிருஷ்ணனைப் பெருமிதமடைய வைத்துள்ளது.

காதலன் படத்தில் வரும் 'என்னவளே அடி என்னவளே' என்ற பாடலை முதல் முறையாகப் பாடினார் உன்னிகிருஷ்ணன். அந்தப் பாடலுக்காக 1994 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"என் மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது கடவுளின் பரிசு," என்கிறார் உன்னிகிருஷ்ணன்.

 

Post a Comment