சென்னை: கடல் படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்வரை ஓ காதல் கண்மணியை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் புகார் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கும் ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், " மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளியிட்ட கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதன் மூலம் நான் பலகோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளேன். அதற்காக வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டக்கூட முடியாமல் இருக்கிறேன்.
மனிதாபிமான அடிப்படையில் தற்போது பெரிய நிறுவனங்கள் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றனர்.
எனவே தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு தற்போது வெளியாகவுள்ள 'ஓ காதல் கண்மணி' பட வெளியீட்டுக்கு முன், மணிரத்னத்திடமிருந்து எனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவரை ஓ காதல் கண்மணியை வெளியிடக்கூடாது என்றும் கோருகிறேன்," என்று கூறியுள்ளார்.
துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ‘ஒ காதல் கண்மணி'யை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
Post a Comment