ரஜினியும் கமலும் மீண்டும் இணைவார்களா? அப்படி இணைந்தால் திரையுலகுக்கே அது திருவிழா மாதிரி இருக்குமே... - இப்படித்தான் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த இரு சாதனை நடிகர்களின் ரசிகர்களில் ஒரு பிரிவினரோ, கமல் நடிப்பதாக வந்த செய்தியைக் கூட விரும்பவில்லை.
கமலும் ரஜினியும் இணைகிறார்கள், அதுவும் கமல் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற வதந்தி (ஆம்.. வெறும் யூகம்தான்.. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை), ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் 'தலைவா... இது வேணவே வேணாம்...' என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கமல் ரசிகர்களில் சிலரும் இந்த பரீட்சார்த்தம் வேண்டாம் என்று கூறியுள்ளனர் (அப்புறம் எப்போதான் இவர்களை சேர்த்து திரையில் பார்ப்பது!)
உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு இணையை, இவர்கள் வேண்டாம் எனக் கூற என்னதான் காரணம்? ஒன்றல்ல.. இரு காரணங்களைச் சொல்கிறார்கள்.
பாயின்ட் நம்பர் ஒன்: இப்போதுதான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கிடையில் மோதல் இல்லாமல் உள்ளது. இந்தப் படம் வந்தால், நிச்சயம் விரும்பத்தகாத மோதல் வெடிக்கும். எனவே இது வேண்டாத வேலை. அதுவும் வில்லன் கமல் என்றால் நிச்சயம் மோதல் எழும் என்பது கமல் ரசிகர்கள் தரப்பு வாதம்.
பாயின்ட் நம்பர் 2: ரஜினியின் பெருந்தன்மை சினிமா உலகம் அறிந்தது. தன்னுடன் நடிக்கும் வில்லன்களுக்கு தன்னைவிட அதிக முக்கியத்துவம் தருவார். அதுவும் கமல் என்றால் கேட்கவே வேண்டாம். எனவே ரஜினியின் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைவதை விரும்பவில்லை. இது ரஜினி ரசிகர்கள்!
நீங்க என்ன சொல்றீங்க?
+ comments + 1 comments
கமல் படத்தில் துணை நடிகராக அறிமுகமாணவர் ரஜினி ... இப்போ ரஜினி ஹீரோ வாக நடிக்க கமல் வில்லனாக நடிக்கணுமா... என்ன கொடும இது.. கொஞ்சம் ரெண்டுபேரையும் மேட்ச் பண்ணி பாருங்க அப்பரம் சொல்லுங்க யாரு ஹீரோ னு ...
Post a Comment