அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.
இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் முக்கியமானது என்னை அறிந்தால்.
இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாகவே ஆந்திராவில் வெளியானது. ஆனால் இப்போது படத்தை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
த்ரிஷா, அனுஷ்கா இருவருக்கும் தெலுங்கில் நல்ல பெயர். தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டப் செய்யப்பட்டு வெளியாகும் தமிழ்ப் படங்களைப் பார்க்க ஆந்திர ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே என்னை அறிந்தால் டப்பிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அநேகமாக மே 2வது வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
Post a Comment