இந்த கோடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை, ரஜினிகாந்த் தன் வீட்டு குட்டி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.
இந்தப் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் படத்தின் சில காட்சிகள் மற்றும் ராகவா லாரன்ஸின் விதவிதமான கெட்டப்புகளை ரஜினியிடம் காட்டி ஆசி பெற்று வந்தார் ராகவா லாரன்ஸ்.
மிக வித்தியாசமாகவும், அபார உழைப்புடனும் படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், படம் பெரிய வெற்றியைப் பெரும் என்று வாழ்த்தியனுப்பினார் ரஜினி.
அதேபோல படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் குவிகின்றனர்.
சமீபத்தில் ரஜினியின் வீட்டில் உள்ள குட்டித் திரையரங்கில், க்யூப் மூலம் ரஜினிக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டினர்.
படம் பார்த்த ரஜினி, ராகவா லாரன்ஸை வெகுவாகப் பாராட்டினார்.
Post a Comment