மாசு படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு.. காசியில் 8 மணி காட்சி ரத்து!

|

சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தில் முதல்நாள் முதல் காட்சிக்காக அனுமதி கேட்டிருந்தனர்.

No special shows for Massu

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்காக அப்படத்தை நள்ளிரவிலிருந்தே திரையிடுவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் லிங்காவுக்கு நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடந்தன.

விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், சூர்யாவின் மாஸ் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சென்னையில் காலை 8 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காசி தியேட்டரில் மாசு படத்தின் சிறப்புக் காட்சிக்கு ரசிகர்கள் குறைவாக வந்ததால், ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Post a Comment