லாஸ் ஏஞ்செல்ஸ்: எ பியூட்டிபுல் மைன்ட் (தமிழில் ஒரு அழகான மூளை என்றும் கூடச் சொல்லலாம் ) என்ற ஒரு அழகான நல்ல படத்தை எடுப்பதற்கு காரணமாக இருந்த கணித மற்றும் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜான் நாஷ் இரு தினங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் கணிதப் பேராசிரியர் ஜான் நாஷ்(86) மற்றும் அவரது மனைவி அலிசியா(82) இருவருமே இந்த விபத்தில் மரணமடைந்தனர்.இருவரும்சீட் பெல்ட் அணியாததே இதற்கு காரணம் என்று மீடியா துறையினர் கூறியுள்ளனர்.
1928 ம் வருடம் பிறந்த ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவை முதல் முறை திருமணம் செய்து சிறிது வருடங்களிலே அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்தார்.
மிக நீண்ட வருடங்கள் சுமார் 37 வருடங்கள் கழித்து 2001 ம் ஆண்டு மீண்டும் தன் முதல் மனைவி அலிசியாவை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டவர்.
நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த கணித மேதையான இவரின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு எ பியூட்டிபுல் மைன்ட் என்ற பெயரில் எழுதப் பட்ட சுயசரிதையையை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் தான் எ பியூட்டிபுல் மைன்ட்.
2001 ம் ஆண்டு ரோன் ஹோவார்டால் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபி சிலும் நல்ல வெற்றியைப் பெற்றது 58 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப் படம் 313 மில்லியன் வசூலித்து சாதனை புரிந்தது.இவ்வளவு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான இந்தக் கணித
மேதையின் மறைவு அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாக தற்போது மாறியுள்ளது.
பல சாதனைகளை புரிந்த இந்தக் கணித மேதைக்கு இறப்பிலும் தன் மனைவியைப் பிரிய மனமில்லை போலும்...
Post a Comment