அர்ஜுனுடன் டூயட் பாடுவாரா கரீனா

|

மும்பை: பாலிவுட்டின் பியூட்டி கரீனா கபூர் இளம் ஹீரோ அர்ஜுன் கபூரை அடுத்தப் படத்தில் காதல் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 ஸ்டேட்ஸ் என்ற ஹிட் படத்தில் அழகு நடிகை ஆலியாவுடன் மிக நெருக்கமாக நடித்து நல்ல பெயரைப் பெற்ற அர்ஜுன் கபூர் இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

Kareena Kapoor to co-star Arjun Kapoor in R Balki’s next

பெயரிடப் படாத அந்த படத்தில் நடிகை கரீனா கபூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கரீனா கைவசம் தற்போது சல்மானுடன் நடித்து வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தைத் தவிர வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை எனவே இந்தப் படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கரீனா தற்போது பஜ்ராங்கி பைஜான் படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பு மற்றும் படத்தின் புரோமோஷன் வேளைகளில் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார்.இந்தப் படத்தின் ரிலீசிற்குப் பின்பு அவர் பால்கியின் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்கி இயக்கிய கடைசி படமான ஷமிதாப் படம் சரியாக போகவில்லை அதே நிலை தான் அர்ஜுனுக்கும் பையன் கடைசியாக நடித்த தீவார் காலை வாரிவிட்டது எனவே அடுத்த படம் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் இருக்கிறார்கள்

ரொமாண்டிக் ப்ளஸ் காமெடி என்ற ரீதியில் படத்தை எடுக்க இருக்கிறார்கள் படத்தை அடுத்த வருடம் 2016 ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வரத்திட்டமாம்.

கரீனா அர்ஜுனுடன் டூயட் பாடுவாரா பார்க்கலாம்...

 

Post a Comment