மும்பை: வரும் வெள்ளிக்கிழமை தீபிகா படுகோனே நடித்துள்ள பிக்கு படமும், சன்னி லியோனின் குச் குச் லோச்சா ஹை படமும் ரிலீஸாகின்றன.
பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கிறது. இந்நிலையில் அவர் சூஜித் சர்கார் இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பிக்கு. படத்தில் தீபிகாவின் வயதான அப்பாவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. அதே தினத்தில் கவர்ச்சியை நம்பி பாலிவுட்டில் காலம் தள்ளும் சன்னி லியோனின் குச் குச் லோச்சா ஹை படமும் ரிலீஸாகிறது.
இது குறித்து குச் குச் லோச்சா ஹை படத்தில் நடித்துள்ள ராம் கபூர் கூறுகையில்,
பிக்கு மற்றும் குச் குச் லோச்சா ஹை படங்களை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. இரண்டுமே நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டுமே மிகவும் வித்தியாசமான படங்கள். பிக்கு வியாபாரம் எங்கள் படத்தைோ, எங்கள் படம் பிக்குவின் வியாபாரத்தையோ பாதிக்காது.
பிக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் தீபிகா, அமிதாப் பச்சன், இர்பான் கான் ஆகியோரின் மிகப் பெரிய ரசிகன் என்றார்.
Post a Comment