ஓவர் டூ "தல 57"... அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் சுசீந்திரன்?

|

சென்னை: அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னை அறிந்தால் பட வெற்றியைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப் படாத படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்து வருகின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

WHO WILL DIRECT THALA 57?

இந்நிலையில், சிறுத்தை சிவா படத்தைத் தொடர்ந்து அஜித், சுசீந்திரன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுசீந்திரன் தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்திற்குப் பிறகு மாஸ் ஹீரோவுக்குண்டான கதையம்சம் கொண்டதாக ஒரு கதையை சுசீந்திரன் உருவாக்க இருக்கிறாராம். இந்த கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பதால் அவரை வைத்து சுசீந்திரன் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment