லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் நான் நடிப்பது உண்மைதான்.. ஆனால் வில்லனாக நடிக்கவில்லை என்று சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து ‘சண்டக்கோழி' இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கிறார்.
முதல் பாகத்தை எடுத்த லிங்குசாமியே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடி யார் என்பது முடிவாகவில்லை.
முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலுக்கு அப்பாவாகவே நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு சத்யராஜ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை சத்யராஜ் மறுத்துள்ளார்.
"விஷாலின் ‘சண்டக்கோழி 2' படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறேன்," என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.
Post a Comment