4ம் திருமணத்திற்குத் தயாரான மிஷன் இம்பாசிபிள் நாயகன்

|

லாஸ் ஏஞ்செல்ஸ்: மிஷன் இம்பாசிபிள் உலகம் முழுவதும் கோடிக்கனக்கான ரசிகர்களை ஈர்த்த இந்தப் படத்தின் 5 ம் பாகமான ரப் நேஷன் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் படம் வெளிவருவதை விடவும் பரபரப்பான விஷயம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இந்த செய்தியைக் கேள்விப் படுபவர்கள் அனைவருமே அப்படியா? இருக்கலாம் போன்ற அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்றனர், விஷயம் இதுதான் மிஷன் இம்பாசிபிள் படத்தின் நாயகனான டாம் குரூஸ் தற்போது 4ம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

'Rogue Nation' Actor Tom Cruise Now Ready For 4th Marriage?

53 வயதான டாம் குரூஸ் தனது 3 வது மனைவியை கடந்த 2012 ம் ஆண்டில் விவாகரத்து செய்தார், அதன் பிறகு தன்னுடைய படங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தனது மனைவியை விவாகரத்து செய்த பின் தொடர்ந்து படங்களில் நடித்த டாம் குரூஸ் வேலைப்பளுவில் சிக்கித் தவித்திருக்கிறார், இவருக்கு உதவி செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு டாம் குரூசின் உதவியாளராகச் சேர்ந்தவர் எமிலி தாமஸ் (22).

உதவியாளராகச் சேர்ந்த எமிலி ஒரு கட்டத்தில் தோழியாகி விட இந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் டாம் குரூஸ். எமிலியும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

வரும் டிசம்பர் மாத இறுதியில் இவர்கள் இருவரின் திருமணமும் நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டாம் குரூசின் வயது 53 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியுடன் 3 வருடம், 2வது மனைவியுடன் 6 வருடம், 3வது மனைவியுடன் 12 ஆண்டுகள் என வாழ்ந்தவர் குரூஸ்.

 

Post a Comment