மனைவியிடம் நடிகர் கிருஷ்ணா விவாகரத்து கோர சுனைனா காரணமா?

|

மனைவி ஹேமலதாவிடமிருந்து நடிகர் கிருஷ்ணா விவாகரத்து கோர, நடிகை சுனைனாதான் காரணம் என தகவல் பரவி வருகிறது.

கழுகு, அலிபாபா, கற்றது களவு, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா, மனைவி ஹேமலதாவை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Is Sunaina reason for Krishna - Hemalatha divorce?

மேலும் மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கிருஷ்ணாவுக்கு தொழில் ரீதியாக தன்னுடன் நடித்த கதாநாயகிகளுடன் நட்பு இருந்தது. இதனால் மனைவி ஹேமலதா அவரைச் சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதில் சுனைனாவின் பெயர்தான் பலமாக அடிபடுகிறது.

சுனைனாவும் கிருஷ்ணாவும் வன்மம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் இருவரும் நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

 

Post a Comment