சத்யராஜுக்கு விஜய் மீது எப்போதுமே தனிப் பாசம். மைக் கிடைத்தால், விஜய்யை ஏகத்துக்கும் புகழத் தவறியதில்லை.
அதனால்தான் ஏற்கெனவே நண்பன், தலைவா போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்தார். ஆனால் அதே சத்யராஜ், இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அட்லீ இயக்கும் இந்தப் புதிய படத்தில் சத்யராஜுக்கு மிக முக்கியமான வேடமாம். ஆனால் எவ்வளவோ சொன்ன பிறகும், தெலுங்கில் கமிட் ஆகிட்டேன் சார். தேதிகள் இல்லை என அட்லீக்குச் சொல்லிவிட்டாராம். அட்லீயின் ராஜா ராணி படத்தில் சத்யராஜ் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.
இதே விஜய் படத்துக்கு அந்த வேடத்தில் முதலில் பிரகாஷ் ராஜை நடிக்க அழைத்திருந்தார்கள். ஆனால் அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment