பெங்களூர்: இயக்குனர் ஆர்.பி. பட்னாயக் தெலுங்கு-கன்னடத்தில் எடுத்து வரும் படத்தில் பிரியாமணி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நடிப்பில் அசத்தினாலும் பிரியாமணிக்கு கோலிவுட்டில் வாய்ப்பு இல்லை. அவரும் எனக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது, நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன் என்று அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னட படங்களில் பிரியாமணி கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் தற்போது இசையமைப்பாளரும், இயக்குனருமான ஆர்.பி. பட்னாயக்கின் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படம் தெலுங்கு-கன்னட மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
முதன்முதலாக பிரியாமணி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது குறித்து பட்னாயக் கூறுகையில்,
படத்தில் பிரியா சக்திவாய்ந்த சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அவரை கவர்ச்சியாகவே பார்த்தவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். படத்தில் நிறைய த்ரில் இருக்கும். கர்தாவியம் படத்தில் வரும் விஜயசாந்தியை மக்களுக்கு நினைவூட்டுவார் பிரியாமணி என்றார்.
Post a Comment