கோடம்பாக்கம் டூ அமேரிக்கா- அஞ்சலி

|

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களில், இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகை அஞ்சலி. இவர் நடிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்பொதும், அங்காடித் தெரு போன்ற படங்கள் நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை அஞ்சலிக்குப் பெற்றுத் தந்தன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அஞ்சலி இடையில் நடந்த குடும்பப் பிரச்சினைகளால், தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனார். மீண்டும் நீண்ட வருடங்கள் கழித்துத் தற்போது தமிழ் சினிமாவில் தனது 2வது இன்னிங்க்சைத் தொடங்கி உள்ளார்.

Anjali Continuously Flying America?

தமிழில் தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், பாபி சிம்ஹாவுடன் இறைவி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு தொடர்ந்து மட்டம் போட்டு விட்டு அமேரிக்காவுக்கு பறந்து விடுகிறாராம் அஞ்சலி.

இதனால் அஞ்சலியை வைத்து படம் எடுத்து வரும் தமிழ் இயக்குனர்கள், வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம்.

 

Post a Comment