மெட்ரோ ரயிலில் சென்னையைச் சுற்றிப் பார்த்த த்ரிஷா

|

சென்னை: சென்னையில் மெட்ரோ டிரெயின் அறிமுகமாகி பலரின் வரவேற்பையும் பெற்று வரும் வேளையில், நடிகை த்ரிஷா 2 தினங்களுக்கு முன்னர் மெட்ரோ ட்ரெய்னில் சென்னையைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

வெள்ளிகிழமைகாலை 7.20 மணிக்கு ஆலந்தூர் ரெயில் நிலையம் சென்ற த்ரிஷா அங்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் உள்ளே வந்திருக்கிறார். அங்கு மெட்டல் டிடெக்டர் கொண்டு த்ரிஷாவை பெண் பாதுகாவலர்கள் பரிசோதித்தனர்.

Last Friday Trisha Travelled On Metro Train

எஸ்கலேட்டர் மூலமாக 4 வது மாடிக்குச் சென்ற த்ரிஷா கோயம்பேடு செல்லும் மெட்ரோ டிரெயினில் ஏறி உள்ளே சென்றார், அவரைப் பார்த்ததும் சந்தோசமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பயணிகளுடன் பயணம் செய்த த்ரிஷா அரும்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டார். மெட்ரோ பயணம் குறித்து த்ரிஷா கூறும்போது " மன்மதன் அம்பு திரைப்படத்தின் போது ஐரோப்பிய மெட்ரோ ட்ரெயின்களில் பயணம் செய்து இருக்கிறேன்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது நமது மெட்ரோ ட்ரெயின்கள் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கின்றன, மெட்ரோ ட்ரெயினில் சென்னையைச் சுற்றிப் பார்த்தபோது த்ரில்லிங்காகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.

 

Post a Comment