வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்துக்காக 250 நாட்கள் மொத்தமாகக் கால்ஷீட் கொடுத்து அதிர வைத்துள்ளார் தனுஷ்.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப் பிறகு வெற்றிமாறனும் தனுஷும் மூன்றாவது முறையாக இணையும் படம் வட சென்னை.
இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இரண்டு பாகங்களையும் ஒரே மூச்சில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, மொத்தமாக 250 நாட்கள் கால்ஷீட்டை அள்ளித் தந்துள்ளாராம் தனுஷ்.
படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்துக்கான வேலைகள் வரும் 2016-ம் ஆண்டு தொடங்கவிருக்கின்றன.
Post a Comment