சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும், என்ற கோரிக்கையை சிவாஜியின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.
ஆங்காங்கே உண்ணாவிரதங்கள் கூட இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரங்கேறின, இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன, சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இந்த அறிவிப்பினை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது.
கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்' என்று தனது அறிக்கையின் மூலம் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கமலஹாசன்.
Post a Comment