இன்று தொடங்கும் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாள் விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் , சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஹீரோவாகத் திகழ்ந்த சிரஞ்சீவி, பின்னர் அரசியல் நுழைத்து தனிக் கட்சி தொடங்கி, அந்தக் கட்சியை பின்னர் காங்கிரஸில் இணைத்து, மத்திய மந்திரியாக சில ஆண்டுகள் பதவி வகித்து, காங்கிரஸ் ஆட்சி பறிபோன பிறகு அமைதியாக உள்ளார்.
இப்போது மீண்டும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு 60 வயது பிறக்கிறது. இதனையொட்டி இன்று அவரது பிறந்த நாள் விழா ஹைதராபாதில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் அவருக்கு நெருக்கமான நண்பர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சல்மான்கான், அம்பரீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர். இந்த விவிஐபிக்கள் ஏற்கெனவே ஹைதராபாதுக்கு சென்றுவிட்டனர்.
Post a Comment