சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்த கபாலி படத்தின் போட்டோஷூட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். முற்றும் புதிய குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர், கலை, தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேஷியாவில் தொடங்குகிறது.
படத்தின் முதல் கட்டப் பணியான போட்டோஷூட் எனப்படும் நிழற்பட படப்பிடிப்பு நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தாடியுடன் கலந்து கொண்டார் ரஜினி. இந்தப் படத்தில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக் எனப்படும் பாதி நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
என்பதுகளிலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
நிழற்பட படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெளியாட்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. படத்தின் முதல் தோற்ற டிசைன் வரும் செப் 18 அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Post a Comment