தமிழில் பெரும் வெற்றிப் பெற்றுள்ள தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் மோகன் ராஜா. இதில் முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கிறார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்து வெளியாகி பெரும் பாராட்டுகளுடன் வசூலைக் குவித்து வருகிறது தனி ஒருவன்.
இதனையடுத்து இந்தப் படத்தை இந்தியின் ரீமேக் செய்ய சல்மான் கான் முயன்று வருகிறார். சல்மான் ஒப்புக்கொண்டால் படத்தை இந்தியில் தானேஇயக்கப் போவதாக ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
மோகன் ராஜா இயக்க உள்ள இப்படம் அடுத்த வருடம் துவங்கும் எனத் தெரிகிறது. தற்சமயம் புரூஸ் லீ, மற்றும் சிரஞ்சீவியின் 150வது பட வேலைகளில் ராம் சரண் தீவிரமாக உள்ளார்.
Post a Comment