சிவகார்த்திகேயனை நான் ஹீரோவாக்கினா... என்னோட ஹீரோ டென்ஷன் ஆகிடுவாரு - கே.வி.ஆனந்த்

|

சென்னை: இயக்குநர் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்று காட்டுத்தீ வேகத்தில் எழுந்த வதந்தி கே.வி.ஆனந்தின் காதுகளை எட்ட, உடனே நான் சிவகார்த்திகேயனை இயக்கவில்லை என்று ட்விட்டரில் மறுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

சமீபத்தில் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக செய்திகள் பரவி வந்தன, மேலும் முன்னணி ஹீரோக்கள் மறுத்ததால் தான் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார் என செய்திகள் பரவ அதற்கு தற்போது டிவிட்டரில் பதில் கூறியுள்ளார் கே.வி.ஆனந்த்.

இது அப்பட்டமான வதந்தி, இதைக் கேட்டால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஹீரோவும் டென்ஷன் ஆகிவிடுவார் என கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2 விஷயங்கள் உருதியாகி உள்ளன ஒன்று கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை, மற்றொன்று அவரின் அடுத்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

இதில் உச்சகட்டமாக கே.வி.ஆனந்தின் இந்த ட்வீட்டை நடிகர் சிவகார்த்திகேயனும் ரீட்வீட் செய்துள்ளார்.

 

Post a Comment