இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
மாதவரம் பொன்னியம்மன் மேடு இ பிளாக்கை சேர்ந்தவர் அஸ்வின். இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மீரா ரித்திகா (20). சினிமா நடன நடிகை. ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கோவை.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இதனால் ரித்திகாவிடம் இனி குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் அஸ்வின்.
ஆனால் இதையும் மீறி ரித்திகா அடிக்கடி சினிமா நடன குழு நண்பர்களை பார்க்க சென்றுவிடுவார். இதனால் இருவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று ரித்திகா கணவருக்கு தெரியாமல் தனது ஆண் நண்பர் ஒருவருடன் மதுவிருந்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் போதையில் தள்ளாடியபடி நண்பருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அஸ்வின், ரித்திகாவை கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த ரித்திகா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காப்பாற்ற முயன்றதில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Post a Comment