கமல் விட்டுக்கொடுத்த தலைப்பு

|

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1997.jpg

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் புரொடக்ஷன் தயாரிப்பாளர் ஆனந்தனிடம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறினார். உடனடியாக கமலை அணுகிய இருவரும், ஸ்கிரிப்ட்டை சொல்லி தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கினர். உடனே ஏற்றுக்கொண்ட கமல், அந்த தலைப்பை வைத்துக் கொள்ள விட்டுக்கொடுத்தார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. நடிக்கிறார். திலகன் மகன் ஷம்மி திலகன் போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகிறார். மதுரிமா ஹிரோயின்.


Source: Dinakaran
 

Post a Comment