திரைப்பட விழாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கினார் கருணாநிதி!

|

http://www.chennaifilmfest.com/wp-content/uploads/2010/07/slide1.jpg
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவதற்காக முதல்வர் கருணாநிதி தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியும், டைரக்டர் மணிரத்னம் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளனர். கோவாவில் நடைபெறுவது போல சென்னையிலேயே சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து ‌கொண்டிருக்கின்றன. இந்த விழாவை சென்னையில் நடத்த தமிழக அரசு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் உள்ளிட்ட சினிமா சங்கங்கள் கோரி‌க்கை விடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். சர்வதேச விழா நடத்த இந்த தொகை போதாது என்பதால் முதல்வரிடம் மேலும் நிதி கேட்க விழாக்குழுவினர் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், டைரக்டர் மணிரத்னம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

சென்னையில் டிசம்பர் 15ம்தேதி முதல் 23ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 130 படங்கள் திரையிடப்பட உள்ளன. இவற்றில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.ஒன்றரை லட்சமும் வழங்கப்பட உள்ளது.
 

Post a Comment